உண்ணாட்டரசிறை சட்டத்துக்கு சபாநாயகர் அங்கீகாரம்!

Date:

பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.

கடந்த 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற இச்சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 83 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய மேலதிக வாக்குகளால் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2022ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமாக இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

சொக்கா மல்லி என அழைக்கப்படும் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

புதிய அமைச்சர்!

எரிசக்தி அமைச்சராக கலாநிதி அருண கருணாதிலக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

நிலக்கரி மோசடி பொய்! எதிர்கட்சிக்கு தோல்வி

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் எந்தவிதமான நிலக்கரி மோசடியும்...

JVPயின் முழுநேர தொண்டர்கள் ராஜிதவிடம் புலம்பல்

தற்போதைய அரசாங்கத்தின் முன்னணி அமைச்சர்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன...