எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவேன் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் ஒருமுறை பதவியேற்றால்தான் இந்த கடினமான வேலைத்திட்டத்தை தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபலமான தலைப்புகளை பொறுப்பற்ற முறையில் பின்பற்ற முடிவு செய்தால் இந்த நாடு மீண்டும் ஒரு பயங்கரமான பள்ளத்தில் விழுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.