முதலீட்டு சபையின் புதிய தலைவராக தினேஸ் வீரக்கொடி

0
195

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக தினேஷ் வீரக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முதலீட்டுச் சபையின் ஏனைய உறுப்பினர்கள் கலாநிதி துஷ்னி வீரகோன், சாந்தனி விஜேவர்தன மற்றும் எராஜ் டி சில்வா.

கொமர்ஷல் வங்கி மற்றும் ஹட்டன் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைவரான தினேஷ் வீரக்கொடி, பல முன்னணி தனியார் நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், நிதி மற்றும் வணிகத் துறைகளில் விரிவான அனுபவத்தைக் கொண்டவராகவும் உள்ளார். முன்னதாக, அவர் கருவூல விவகாரங்களில் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here