வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைத்தால் அடுத்த ஆண்டில் எந்த செலவும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஆணையாளர்

Date:

மன்னார் பிரதேச சபையில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் நேற்றைய தினம் நேரில் சென்று ஆராய்ந்தார்.

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு தினத்தில் கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டை காரணம் காட்டி வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பு இன்றி ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பிலும், முரண்பாடுகள் தொடர்பிலும் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனால் உடனடியாக நேரில் சென்ற ஆணையாளர் இவை தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இவற்றின் அடிப்படையில் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைக்க முடியாது எனவும் வரவு செலவுத் திட்ட திறைவேற்றத்திற்கான கால வரையறைகளும் அதில் அடங்குவதனால் உடன் வரவு செலவுத் திட்டம் சபைக்கு சமர்ப்பித்து அதனை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு நிறைவேற்றத் தவறினால் 2022ஆம் ஆண்டின் ஆரம்பம் முதலே சபையின் எந்தச் செலவும் சட்ட அனுமதியற்ற செலவாகவே கணிக்கப்படும் என்பதனால் எந்தவொரு செலவும. மேற்கொள்ள முடியாத நிலைமையே ஏற்படும் என்பதனை அறிவுறுத்தியதாக தெரியவலுகின்றது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...