கூட்டணி அமைக்கும் அதிகாரம் சஜித்துக்கு

Date:

அடுத்த வருடம் நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பும் அதிகாரத்தை மீண்டும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க சமகி ஜன பலவேகவின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

“சமகி ஜன பலவேகவின் செயற்குழு கூட்டம், இந்த ஆண்டின் கடைசி செயற்குழு கூட்டமாக கூடியது. அதில் அடிப்படையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒன்று, கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக் கூட்டணியைக் கட்டியெழுப்பும் அதிகாரத்தை மீண்டுமொருமுறை ஒப்படைத்தோம். அதன்படி, தலைவராக அவர் எடுக்க வேண்டிய சரியான முடிவுகளை எடுத்து கட்சியை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், எதிர்வரும் ஆண்டிற்கான அனைத்து அமைப்பாளர்களுக்கும் குழுக்களுக்கும் தெரிவிப்பதற்கு பல பயிலரங்குகளை ஏற்பாடு செய்வதுடன், நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் தொடர் மாநாடுகளை நடத்தவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

கேள்வி – இப்போது இந்த சுதந்திர ஜனதா சபை இணையும் என்று கூறப்படுகிறது. அது எப்படி நடக்கிறது?

“அது பற்றி முடிவெடுக்கும் பொறுப்பும் அதிகாரமும் முழுமையாக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி வெற்றிக்கு உகந்த அனைத்து அணிகளையும் இணைக்க செயற்குழு முடிவு செய்தது. எனவே, அவை தனி நபர்களா, அமைப்புகளா, அரசியல் கட்சிகளா என்பதை கட்சித் தலைவர் முடிவு செய்கிறார்.

சமகி ஜனபலவேக செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...