சுனாமி பேரழிவை முன்னிட்டு அனைத்து மக்களும் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழி பேரலையினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக இவ்வாறு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.