‘தி லெஜன்ட்ஸ்’ கிண்ணம் லிப்பக்கலை அணிவசம், மெராயா அணிகளுக்கு இரட்டை பரிசு! (படங்கள் இணைப்பு)

0
284

லிந்துலை ஹென்போல்ட் மைதானத்தில் இடம்பெற்ற ‘தி லெஜன்ட்ஸ்’மென்பந்து கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை லிப்பக்கலை கலைஒளி அணி வென்றது.

இரண்டாம் இடத்தை மெராயா எம்சிசி அணியும் மூன்றாம் இடத்தை மெராயா நகர அணியும் பெற்றனர்.

தொடரின் சிறந்த வீரராக கலைஒளி அணி வீரர் ரவியும் சிறந்த துடுப்பாட்ட வீரராக மெராயா எம்சிசி அணி வீரர் நாகராஜும் சிறந்த பந்துவீச்சாளராக கலைஒளி அணி வீரர் மகேந்திர பிரகாசும் தெரிவாகினர்.

வெற்றிபெற்ற அணிகளுக்கு கிண்ணம் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன் சிறந்த வீரர்களுக்கு கேடயம் வழங்கப்படது.

அத்துடன் இங்கு லங்கா நியூஸ் வெப் ஏற்பாடு செய்த போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட ஐம்பதிற்கு மேற்பட்டவர்களில் குழுக்கள் முறையில் இரண்டு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தலா 5000 ரூபா பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

லிப்பக்கலையை சேர்ந்த ஆசிரியர் கோபி மற்றும் ஹென்போல்ட் ரொஹான் ஆகியோர் வெற்றியாளர்களாக தெரிவாகினர்.

தி லெஜன்ட்ஸ் கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடாத்தி முடித்த கார்த்திக், ரஜனி மற்றும் ஜனா ஆகியோருக்கு லங்கா நியூஸ் வெப் இலங்கை – லண்டன் குழு சார்பில் வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here