ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நொரோச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு தொடர்பில் இன்று (டிசம்பர் 27) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும், வழமையான பராமரிப்புக்காகவும் நொரோச்சோலையில் உள்ள யூனிட் 2 காலவரையின்றி மூடப்பட்டது.
நாட்டில் நிலக்கரி இருப்புக்கள் ஜனவரி 02 ஆம் திகதி வரை வறண்டுபோகும் என்ற ஊகங்களுக்கு பதிலளித்த அமைச்சர், நொரோச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தில் தற்போதுள்ள நிலக்கரி இருப்புக்கள் ஜனவரி 08 ஆம் திகதி வரை போதுமானது.
பல்வேறு காரணங்களால் புதிய நிலக்கரி கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அரசு உரிய நேரத்தில் கொள்முதல் நடைமுறையைத் தொடங்கத் தவறியதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
நிலக்கரி கொள்வனவில் தாமதம் ஏற்பட்டாலும், உரிய நேரத்தில் அவை நாட்டுக்கு வந்துசேரும். மின்சாரம் துண்டிக்கப்படும் காலத்தை இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜனவரி 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் மின்வெட்டு இருக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் 5 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும். இந்த சூரிய சக்தி அலகுகள் இந்திய கடன் வசதியின் கீழ் மூன்று மாதங்களுக்குள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
N.S