நட்பு நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று ஜனாதிபதி பெருமையடித்துக் கொண்டாலும், நட்பு நாடு என்று கூறுவது, விலை அதிகரிப்பும் பெருக்கி விற்பதுவும்தான் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்கள் மீது அமைதியின்மையையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், நாட்டின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
சக்வல நிகழ்ச்சித்திட்டத்தின் 37 ஆவது நட்புறவு வகுப்பறையை கொழும்பு வடக்கு டி லா சால் கல்லூரிக்கு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அதிக விலை கொடுத்து விற்பனை செய்து நாட்டு மக்களைக் கொன்று குவிப்பதாகவும் உணர்திறன் இல்லாத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களையும் சட்டத்தையும் மீறி மின்கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் செயற்படுவதாகவும், விடயப்பொறுப்பான அமைச்சர் ஓராண்டில் 3 முறை சட்டவிரோதமாக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நீர்மின்சார உற்பத்தி உயர் மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், 3 மாதங்களில் 3 தடவைகளுக்கு மின் கட்டணத்தை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தை விற்க அரசு தயாராக இருப்பதாகவும், இதனால் ஊழியர் பாதுகாப்பு கூட இழக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.