இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
இன்று (27) புதுடில்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன், மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
புதுடில்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, அங்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடனும் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இந்நாட்களில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் முன்னாள் பிரதமரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.