Wednesday, July 3, 2024

Latest Posts

யாழில் களவாடப்பட்ட 23 சிலைகளும் பொலிசாரால் மீட்பு.

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் அண்மைய நாள்களில் இந்து ஆலயங்களில் களவாடப்பட்ட 23 சிலைகளுடன்  இருவர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 26 ம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் பல விக்கிரகங்கள் திருடப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர்  கைது செய்யப்பட்டதோடு கைது செய்யப்பட்டரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நவகிரி பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இரண்டு சந்தேகநபர்களும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் 

அச்சுவேலி ,பலாலி ,தெல்லிப்பளை மானிப்பாய் ,சுன்னாகம் ,இளவாலை காங்கேசன்துறை ,ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  சிலைகள் களவாடப்பட்டு நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன
கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளை திருடப்பட்டவர்களுக்கு கையளிப்ப தற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
மேலும் குறித்த அக்கறையுடன் ராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
கைது செய்யப்பட்டோரின்  அலைபேசியில் திருடப்பட்ட 5 விக்கிரகங்களின் ஒளிப்படங்களும் காணப்பட்டன.  

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் 2 விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டன. அத்தோடு குறித்த கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 சிலைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன எனும் குறித்த சிலை திருட்டு சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதோடு மேலும் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் எனினும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
கைப்பற்றப்பட்ட சிலைகள் 23 ம்  இன்றைய தினம் தெல்லிப்பளை பொலிசாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது 

குறித்த கைது சம்பவத்தில்  சம்பவத்தினை தெல்லிப்பளை  பொலிஸ் பொறுப்பதிகாரி இந்திக டி சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான அணியினர் குறித்த கைது சம்பவத்தினை முன்னெடுத்திருந்தனர்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.