சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே வேண்டும்

0
23

தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாதென பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,

“பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாதென்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரத்தை பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய வேண்டும். புதிய ஆண்டு பிறக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள், அபிவிருத்திகள், வாழ்வாதாரங்கள் முற்றுமுழுதாக கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என்று பார்த்தால் ஒரு ஏமாற்றமான நிலைமையே எஞ்சியிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here