காரைநகர் பிரதேச சபைக்கு மீண்டும் ம. அப்புத்துரை

0
163

காரைநகர் பிரதேச சபையில்  தவிசாளராக மீண்டும்  மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார் உப தவிசாளர் பதவி துறந்தார்.

காரைநகர் பிரதேச சபையில் தவிசாளராக இருந்த மயிலன் அப்புத்துரை இரு தடவை சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டமும் தோல்வியடைந்தமையினால் தவிசாளர் பதவியை இழந்தார். இதன் காரணமாக இன்று காலை உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் ரஞ்சன் தலைமையில் புதிய தவிசாளர் தேர்வு இடம்பெற்றது.

இதன்போது மீண்டும் மயிலன் அப்புத்துரையின் பெயர் தவிசாளராக பிரேரிக்கப்பட்டது. இதன்போது 11 பேர் கொண்ட சபையில் 7 பேர் மட்டுமே பிரசன்னமாயிரிந்தபோதும் வேறு பெயர் ஏதும் பிரேரிக்கப்படவில்லை. இதனால் மயிலன் அப்புத்துரை மீண்டும. தவிசாளராக போட்டியின்றித் தேர்வானார்.

இதேநேரம் காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here