மாகாண சபையின் வரம்பையறியாமல் வடக்கு மாகாண ஆளுநர் செயல்படுவதனை எண்ணி மனம் வருந்துகின்றோம் என ஈ.பீ.டீ.பியைச் சேர்ந்த தவராசா தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரின் இரு கலந்துரையாடல்களில் அமைச்சரின் சார்பில் பங்கு கொண்டிருந்தேன். இரு கூட்டங்களும் ஓர் மேலதிகாரியின் கலந்துரையாடல்போல் அல்லாது தொண்டு நிறுவனம் ஒன்றின் கலந்துரையாடலை ஒத்ததாகவும் ஆளுநர் தனக்கு உள்ள அதிகாரம் என்ன என்றோ அல்லது எதனை செய்ய முடியும் என்பதனை அறியாதவராகவே காணப்படுகின்றார்.
இவ்வாறு வரையறை அறிந்திருக்காவிட்டாலும் தெரிந்தவர்களின் ஆலோசணையை பெறவேண்டும். அவ்வாறும் இடம்பெறுவதாகவும. தெரியவில்லை. இதனால் அவரின் கீழ் உள்ள அதிகாரிகளை மட்டுமன்றி மக்கள் பிரநிதிதிகளையும் அழைத்து நேரம் கடத்துவதாகவே அமைகின்றது.
இதேநேரம் 29ஆம் திகதி
யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடக்கின் எந்தவொரு மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் நான் உட்பட இருவர் பதில் பிரதிநிதிகளாக கலந்துகொண்ட கூட்டத்தில் வைத்து அனைத்து பிரதிநிதிகளையும் 3 குழுவிற்கு பிரித்து ஓர் திட்டத்திற்கான ஏற்பாட்டை மேற்கொண்டால் அது எவ்வாறு வெற்றியளிக்கும் மாறாக தோல்வியிலேயே முடிவடையும்.
இதனால் ஆளுநரின் செயல்பாட்டை எண்ணி வேதனை அடைவதைத் தவிர வேறு ஏதும் கூறமுடியவில்லை என்றார்.