இன்று நாட்டுக்கு வரவிருக்கும் எரிவாயுவை உடனடியாக விநியோகிக்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 3700 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையிலிருந்து இரகசியமாக வெளியேறிய கோத்தபாய ராஜபக்ஷ தற்போது இரகசியமான பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார். பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பதவியில் நீடிக்கப் போவதில்லை என தீர்மானித்த அவர், எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.
நாளை மற்றுமொரு எரிவாயு கப்பல் வரும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3740 மெட்ரிக் தொன் எரிவாயு உள்ளதுடன், இம்மாதம் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு பெற திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய தற்போது நாடு முழுவதும் நிலவும் எரிவாயு நெருக்கடி இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.