எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் யார் வெற்றி பெற்றாலும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பிரதமராக இருப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 20 ஆம் திகதி ஜனாதிபதி வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் போட்டி நடைபெறவுள்ளது.
விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பூரண ஆதரவைப் பெற்றுள்ளதால், பாராளுமன்றத்தில் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தாலும், பாராளுமன்றத்திற்கு வெளியில் போராட்டம் நடத்துபவர்களை சமாதானம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சரத் பொன்சேகாவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பம் முதலே சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களும் நண்பர்களும் போராட்டத்தில் பல தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாலும், ஜூலை 09 போராட்டம் உச்சத்தில் இருந்தபோதும் தேசிய மட்ட அரசியல்வாதியாக இருந்து நடுவில் சென்று உரையாற்றிய ஒரேயொருவர் பொன்சேகா எனவும் பொன்சேகாவின் பணி மற்றும் இராணுவத்தில் பொன்சேகாவுக்கு அதிக விசுவாசம் இருப்பதால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொன்சேகாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது என்றும், ஏனெனில் ராஜபக்சவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையிலான மோதல் சிறிது காலத்திற்கு முன்னர் முடிவுக்கு வந்ததாலும், கடந்த மே மாதம் கோட்டாபய ராஜபக்சவே பிரதமர் பதவியை ஏற்குமாறு சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்தார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றாலும், அவரது கட்சியின் தவிசாளராகிய, சரத் பொன்சேகாவுக்கே பிரதமர் பதவி வழங்குவதற்கு அதே கட்சி முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஜனாதிபதிக்கு பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகள் ஆகிய பொறுப்புகள் ஒதுக்கப்படும் அதே வேளையில் பிரதமருக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய பொறுப்புகள் ஒதுக்கப்படும்.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இது மிகவும் உகந்த தீர்வு என நடுநிலை அரசியல் விமர்சகர்களும் இரு தரப்பினர் முன்னிலையில் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சரத் பொன்சேகா தற்போது போராட்டத்தின் அரசியல் பிதாவாக இருப்பதாக தெரிகிறது…