திங்கள்கிழமை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பொன்றை நடத்தினார்.
அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த அரசிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களும் கருத்து தெரிவித்தனர்.
அதன்படி, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும்.
அதனால் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.