போராட்ட நாளன்று ஜனாதிபதி செயலகத்துக்குள் முதலில் நுழைந்தவர் கைது!

0
191

ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்குள் முதன் முதலாக பலவந்தமாக பிரவேசித்த நபர் என அடையாளம் காணப்பட்டவரை நேற்று (01) பிற்பகல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும், அவரது நடத்தையால் குழப்பமடைந்த குழுவினர் திடீரென பலவந்தமாக அங்கு நுழைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த மேலும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களும் எதிர்வரும் காலங்களில் கைது செய்யப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here