இரண்டாவது அலை வரப்போகிறது, இந்த ஆட்சியாளர்கள் செல்வதற்கான இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் – பொன்சேகா

0
170

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி முதல் போராட்ட அலை வீசியதாகவும், இரண்டாவது அலை இன்னும் தொடர்வதாகவும் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“இந்த அடக்குமுறை செயலை நாங்கள் மிகவும் வெறுப்புடன் கண்டிக்கிறோம். திருட்டுத்தனமாக ஜனாதிபதி நாற்காலிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி, இந்நாட்களில் இந்நாட்டு மக்களை துன்புறுத்தி, கைது செய்து, சிறைகளில் அடைக்கவே செயற்படுகின்றார்.

இந்த ஆட்சியாளர்கள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால், அதிகாரிகள் கூட தர்மசங்கடத்தில் உள்ளனர். இவ்வாறு போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் அதற்கு இடமளிக்க மாட்டோம். இளைஞர்கள் அணிவகுத்த முதல் அலை கடந்த மாதம் 9ம் தேதி வந்தது. இரண்டாவது அலை இன்னும் வந்து கொண்டிருக்கிறது. இப்படி அடக்கி நிறுத்தலாம் என்று நினைப்பது தவறு. நிச்சயமாக இரண்டாவது அலை வரும், பின்னர் இந்த ஆட்சியாளர்கள் செல்ல வேண்டிய இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.”

கைது செய்யப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று (02) கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here