அளுத்கம களுஅமோதர பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் கடந்த 5ஆம் திகதி அளுத்கம பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று கசிப்பு அல்லது சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் திப்போலொன்றை சுற்றிவளைத்ததாக அளுத்கம பொலிஸ் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது. .
சில காலமாக இந்த கடத்தலை மேற்கொண்டு வரும் சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் பொலிஸாராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்ட சுவரால் சூழப்பட்ட கட்டிடத்தில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக சோதனையில் கலந்து கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம், 300 லீற்றர் கோடா, 20 லீற்றர் தயார் செய்யப்பட்ட கசிப்பு சாராயம், 200 லீற்றர் கொள்ளளவு கொண்ட வெள்ளை உலோகத் தொட்டி, பதினெட்டு அடி நீள குழாய் நீர்த் தாங்கி, 1000 மீற்றர் கொள்ளளவு கொண்ட நீர்த்தாங்கி மற்றும் பயன்படுத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த உபகரணங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
அப்பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகாமையில் இந்தக் கசிப்பு கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வீட்டு எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தி இந்தக் கடத்தல் மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாளொன்றுக்கு 100 போத்தல்கள் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்