சர்வகட்சி ஆட்சிக்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த பிரேரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (08) பங்குபற்றும் அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள 11 சுயேச்சைக் கட்சிகள் மற்றும் 43ஆவது படையணி பிரிவின் தலைவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி, தேசிய மக்கள் சக்தி மற்றும் இன்னும் சில தமிழ் அரசியல் கட்சிகள் மட்டுமே எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த எஞ்சியுள்ளதை சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, மக்களின் அபிலாஷைகளுக்காக அரசியல் சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சர்வகட்சி ஆட்சியில் பங்கேற்கும் அனைவரது ஆர்வத்தையும் பாராட்டினார்.