விரைவில் வெளியாகிறது உயர் தர பரீட்சை பெறுபேறுகள்

Date:

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும், கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக செயன்முறை பரீட்சைகளில் தோற்றுவதற்கான திகதி பிற்போடபட்டமையால், பெறுபேறுகளை இறுதி செய்வது தாமதமாகியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரமளவில் செயன்முறை பரீட்சைகள் நிறைவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...