22வது திருத்தச் சட்டமூலதிற்கு எதிர்ப்பு

Date:

இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுக்கும் வகையில் அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

22ம் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சித்தால் அதற்கு எதிராக உரிய பிரிவு உறுப்பினர்கள் வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.ஒருவரை குறிவைத்து இந்த ரத்து புகுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். தனிநபர்களை இலக்கு வைத்து இவ்வாறான சரத்துக்களை அரசியலமைப்பில் உள்ளடக்குவது நியாயமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது 22ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் இணக்கப்பாடு அவசியமானது.

இதேவேளை, இரண்டரை வருடங்களின் பின்னர் பொதுத் தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வரும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனை நான்காக திருத்துவதற்கான பிரேரணையை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

22ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றும் போது, ​​பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விருப்பத்தின் பேரில் வாக்களிக்க அனுமதிக்கும் யோசனையை கட்சிக்கு சமர்ப்பிக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...