நாட்டில் திட்டமிட்ட குற்றங்கள் அதிகரிப்பு, 2 மாதங்களில் 28 பேர் கொலை!

0
240

திட்டமிட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தென் மாகாணத்திற்கு மாத்திரம் 200-க்கும் மேற்பட்ட விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆயுதங்களுடன் கடமைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக பொலிஸ் விசேட நடவடிக்கை பிரிவு மற்றும் பொலிஸ் நிலையங்களின் அடிப்படையில் விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இடம்பெறும் பெரும்பாலான குற்றச் சம்பவங்கள், வௌிநாடுகளில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் முன்னெடுக்கப்படுவதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாத்திரம் திட்டமிட்ட 24 குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here