அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவிக்கின்றார்.
அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என இணையச் சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொலீசார் அசுத்த நீரால் அடிக்கிறார்கள் என்றார்.