செய்திகளின் சுருக்கம் 03/10/2022

0
123

1. சகல விகாரைகளுக்கும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வில் சலுகைகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் 3 பீடங்களைச் சேர்ந்த அதி வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விகாரைகள் சமுதாயத்திற்கு மகத்தான சேவை செய்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

2. கடன் மறுசீரமைப்பு என்பது நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்ட செயலாகும் என்று முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ ஏ விஜேவர்தன எச்சரிக்கிறார். அர்ஜென்டினாவில் அவ்வாறு செய்ய 11 ஆண்டுகள் ஆனது என்று சுட்டிக்காட்டினார். நாடு சர்வதேச நாணய நிதியத்தை அணுகி இப்போது கிட்டத்தட்ட 7 மாதங்களாகியதுடன் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என அறிவித்து 6 மாதங்களாகின்றன.

3. கடந்த 8 வருடங்களில் பத்து சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் ரூ.504 மில்லியனுக்கு மேல் செலவிட்டுள்ளன. இந்த ஆணைக்குழுக்கள் மூலம் ஏற்பட்ட விளைவுகளில் எந்த தகவலும் இல்லை.

4. மதுபான விலை போத்தலுக்கு சராசரியாக ரூ.150 அதிகரித்தது. இரண்டு பிராண்டு சிகரெட்டுகளின் விலை ஒரு குச்சிக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.

5. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என C V விக்னேஸ்வரன் தெரிவிக்கிறார். UNHRC தீர்மானம் இலங்கைக்கு ஆதரவாக “போதாது மற்றும் நீர்த்துப்போனது” என்று சாடுகிறார்.

6. ஜப்பான் நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. கடன் மறுசீரமைப்பு திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னரே இதுபோன்ற விவாதங்களை தொடங்க முடியும் என்று ஜப்பான் கூறுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசகர்களால் ஊக்குவிக்கப்பட்ட “மென்மையான” கடனை ஏற்க ஒரு கடனாளியும் இப்போது தயாராக இல்லை.

7. உக்ரைன் மோதலின் சிற்றலை விளைவுகள் உலகின் பெரும் பகுதிகளை மிகவும் பாதிப்படையச் செய்துள்ள நிலையில் புதிய மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பங்களிப்பதாக உலக உணவுத் திட்டம் கூறுகிறது. இலங்கையில் முக்கால்வாசி மக்கள் தங்கள் உணவு உட்கொள்ளலைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

8. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களுக்குத் தேவையான 5 இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களுக்கான வரிகளை அரசாங்கம் தள்ளுபடி செய்கிறது. இதனால் 10 நாப்கின்கள் கொண்ட பேக்கின் விலை ரூ.50 முதல் 60 வரை குறைக்கப்படும்.

9. பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் 41 வயதில் காலமானார். “இனி அவன்” படத்தில் நடித்ததற்காக அவர் சிறந்த நடிகராக விருது பெற்றதுடன் சிறந்த திரைப்படமாகவும் அது தேர்வு செய்யப்பட்து.

10. தாமரை கோபுரம் திறக்கப்பட்ட முதல் 15 நாட்களில் 100,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை வந்து சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here