அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிறார் ஜீவன்..

0
225

அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைச்சரவை அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கு தமது கட்சி விருப்பம் தெரிவித்துள்ளதாக அதன் செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், தனது கட்சிக்கு எந்த அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதைப் பொறுத்தே அரசாங்கத்தில் இணைவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here