‘மகிந்தவுடன் எழுச்சி’ இனி இல்லை

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்பட்ட “மகிந்தவுடன் எழுச்சி” கூட்டத் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு அரசியல் கூட்டங்களை நடத்துவது பொருத்தமானதல்ல என கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று வலியுறுத்தியதை அடுத்து கூட்டத் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

முதலில் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்ந்து கட்சியை மறுசீரமைத்து பின்னர் கூட்டங்களை நடத்துவதே சிறந்தது என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“மகிந்தவுடன் எழுச்சி” கூட்டத் தொடர் களுத்துறையில் ஆரம்பிக்கப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச தலைமையில் நாவலப்பிட்டியிலும் புத்தளத்திலும் கூட்டங்கள் நடைபெற்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...