‘பட்ஜட்’டை நிறைவேற்ற ஜனாதிபதி தரப்பு தீவிரம்

Date:

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்தன. ஆனால், நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 121 வாக்குகள்தான் கிடைத்தன.

இதனால் ஒருவேளை பட்ஜட் தோல்வியடைந்துவிடுமோ என்று ஜனாதிபதி தரப்பு அஞ்சுகின்றது.

அரசுக்குள்ளும் சிலர் அமைச்சுப் பதவிகள் கேட்டு ரணிலுடன் முட்டி மோதுவதால் அவர்கள் இறுதி நேரத்தில் காலைவாரி விடுவார்களோ என்ற அச்சம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசுக்குள்ளும் அரசுக்கு வெளியேயும் வாக்கு வேட்டையில் ஜனாதிபதி தரப்பு ஈடுபட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...