தலைமன்னாரில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறுவதற்காக செல்லவிருந்த இரண்டு பெண்கள் உட்பட 05 பேரை இலங்கை கடற்படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
தலைமன்னார் கடற்படைத்தள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தலைமன்னார பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகவும், 16 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
N.S