“மலையகம் – 200” தலைப்பில் இலங்கைக்கு இந்திய தமிழர் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வு பெப். 26இல்

Date:

“மலையகம் – 200” என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்தும் நிகழ்வை பெப் 26ம் நாள் ஞாயிறன்று தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்தும்.

இதில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

இலங்கை இந்திய மலையக தமிழர், இலங்கைக்கு வந்த 1823ம் ஆண்டிலிருந்து கடந்த 200 வருடங்களாக இலங்கையின் தேசிய பொருளாதாரத்துக்கு வழங்கி வரும் பங்களிப்பை ஆராய்வு செய்து அங்கீகரிக்க, அமைச்சரவை பத்திரம் மூலம் இலங்கை அரசு அதிகாரபூர்வமாக தீர்மானித்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம்.

அதேவேளை இந்திய வம்சாவளி மலையக தமிழர் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்நாட்டில் மிகவும் பின்தங்கிய பிரிவினராக, வறுமை, உணவின்மை, காணியுரிமை இன்மை, வீட்டுரிமை இன்மை, கல்வியுரிமை இன்மை ஆகிய கொடுமைகளை எதிர்கொண்டு, இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக இல்லாமல், பெருந்தோட்டங்களிலும், தொழில் தேடி மாநகரங்களிலும், வாழ்கிறார்கள்.

இந்த மக்களின் பின்தங்கிய குறைவளர்ச்சியை ஆய்வு செய்து அவர்கள் இதுவரை காலமும் இழந்த வளர்ச்சிகளை எட்டிபிடிக்கும் நோக்கில், அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, மீளுறுதி (affirmative action) நடவடிக்கைகளை அரசாங்கம் எதிர்வரும் 200வது ஆண்டு முதல் முன்னெடுக்க ஆரம்பிக்க வேண்டும் என நாம் அரசாங்கத்தை கோருகிறோம்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...