தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைமை பதவி மாவைக்கு ; ரெலோ வரவேற்பு!

Date:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் யோசனையை ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. வரவேற்றுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாகக் கருத்துத் தெரிவித்திருந்த தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாத சூழலில் அது இனப்பிரச்சினைக்கான தீர்வில் பாதக நிலைமையைத் தோற்றுவிக்கும் என்று கூறியிருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியத் தரப்புக்கள் ஓரணியில் திரளலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...