75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் பிரதான நிகழ்வு இடம்பெறவுள்ளது. அதற்குப் பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்ற கலாசார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயற்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
N.S