புதிய கூட்டணியை அமைக்கும் ஐ.தே.க – பொதுஜன பெரமுன ; பொது சின்னத்தில் போட்டி!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளும் சில உள்ளூராட்சி மன்றங்களில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், சில உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது சில உள்ளுராட்சி மன்றங்களில் இரு கட்சிகளும் பொது சின்னத்தையே பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் போட்டியிடும் கட்சி சின்னங்களை தீர்மானிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையில் நாளை (10) கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அங்கு போட்டியிடுவதற்கான நடைமுறை மற்றும் பொது சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ருவன் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, பாலித ரங்கே பண்டார, மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் இந்த விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

SLPP சார்பில் பசில் ராஜபக்ஷ, சாகர காரியவசம், சஞ்சீவ எதிரிமான்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

3 கோடி பெறுமதி தங்க நகைகளுடன் தொழிலதிபர் கைது.!

ரூபாய் 3 கோடியே 65 லட்சத்து 19 ஆயிரத்து பெறுமதியான தங்க...

வாழ்க்கைச் செலவு மற்றும் வரிச்சுமைக்கு எதிராக போராட்டம் – 6 பேர் கைது

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட...

அஹுங்கல்லையில் 74 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு

அஹுங்கல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வெஹெர பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை...

ஞானசார தேரர் கைது

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பூஜ்ஜிய கலகொடஅத்தே ஞானசார தேரர், தினியாவல பகுதியில்...