ரெஜினோல்ட் குரே காலமானார்!

0
226

முன்னாள் ஆளுநரும் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 75 ஆவது வயதில் காலமானார் என நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர், வெகுஜன ஊடக அமைச்சர், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர், விமான போக்குவரத்து அமைச்சர், நீதி பிரதி அமைச்சர், மேல் மாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை தலைவர், இலங்கை ரூபவாஹினி கூட்டுறவின் (SLRC) தலைவர் என பல பதவிகளை இவர் வகித்துள்ளார்.

2019 ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து (SLFP) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு (SLPP) சென்ற குரே, இறக்கும் போது SLFP யின் களுத்துறை மாவட்டத் தேர்தல் அமைப்பாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here