கமல் குணரத்னவின் பதவி பறிபோகிறது ; புதிய பாதுகாப்பு செயலாளர் குறித்து கவனம்!

0
209

அரச பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்குக் காரணம், ஜனாதிபதி மாளிகைப் போராட்டத்தின் போது, ​​அலரிமாளிகை உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களுக்குள் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க, பாதுகாப்புப் படையினரை உரிய முறையில் வழிநடத்தத் தவறியதாக, பாதுகாப்புச் செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி, புதிய பாதுகாப்புச் செயலாளராக ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் ருவான் விஜயவர்தனவினால் இந்த யோசனை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here