கொழும்பில் போராட்டம்!

0
237

பல தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு பேரணிகள் காரணமாக கோட்டை ஓல்கொட் மாவத்தையின் ஒரு பாதை போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ளது.

அதன்படி, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள பாதை போக்குவரத்துக்காக மூடப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் அரசாங்க அதிபர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி உட்பட பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்றத்திற்கு அருகில் பௌத்த மதகுருமார்கள் குழு ஒன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் பாராளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது அங்கு சற்று பதற்ற நிலைமை உருவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here