பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து தற்போது பரிசீலனையில் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை மார்ச் மாதத்திற்குள் பெறுவது குறித்து ஜனாதிபதி மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.
நெரு வியாழக்கிழமை (பிப்ரவரி 16) மாலை சிறிய மற்றும் பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலை, மின்சார கட்டணம், உபகரண பராமரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் உற்பத்தி மற்றும் நிர்வாகத்திற்கான பிற செலவுகள் 1 கிலோகிராம் நெல்லின் உற்பத்தி செலவு அதிகரிப்பதற்கு வழிவகுத்தது குறித்து ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும், ஆலை உரிமையாளர்கள் தாங்கள் பெற்ற வங்கிக் கடனுக்கு 28% வட்டி செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
N.S