மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

0
157

வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சேவைக்கள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் எண்.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 வது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் குறித்த வர்த்தமானியில் படி, மின்சாரம், பெட்ரோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here