தேர்தல் இறந்துவிட்டது ; இறப்புச் சான்றிதழை எழுதுவதே எஞ்சியுள்ளது!

0
288

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு வெளியே உள்ள விவகாரங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், இதற்கு யாரும் பொறுப்பு என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here