உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்று நியூசிலாந்தின் ஒக்லாந்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
”இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டி மக்களின் வாக்குரிமையை பறிக்காமல் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துங்கள்” – என தேசிய மக்கள் சக்தியின் நியூசிலாந்து கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.
மக்களின் வாக்கு பலம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும், நாட்டை இளைஞர்களிடம் ஒப்படைத்து நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.
N.S