போராட்டத்துக்கு தயாராகும் ஆசிரியர் சங்கங்கள்!

Date:

கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் எதிர்வரும் புதன்கிழமை (22) கோட்டை புகையிரத நிலையத்தில் ஒன்று கூடி தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து மேலதிக தீர்மானங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் மற்றும் கூட்டு ஆசிரியர் சேவை சங்கம் உட்பட அனைத்து ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அவர் தெரிவித்தார்.

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாறுதல் சபையை கலைக்கும் திடீர் தீர்மானத்திற்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை. அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாலேயே நாங்கள் கூட்டத்திலிருந்து வெளியே வந்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...