கடமைகளுக்கு இடையூறு செய்தால் சட்ட நடவடிக்கை!

0
62
Only India assisted Sri Lanka with fuel - Sri Lankan Energy Minister Kanchana Wijesekera

எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் ஏனைய ஊழியர்களின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அல்லது அத்தியாவசிய சேவை கட்டளைகளை மீறும் பெற்றோலிய தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய மொத்த விற்பனை நிலையத்தின் தலைவருக்கும், இவ்வாறு செயல்படும் ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here