IMF இலங்கைக்கு வழங்கிய கடனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எதிர்ப்பு!

Date:

சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்காத கொள்கையைக் கொண்டுள்ள இலங்கை அரசு எப்படி சர்வதேச நிதிகளுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தநிலையில், மனித உரிமைகள் பாதுகாப்பு, மத சுதந்திரம் அல்லது தமிழர்களுக்கு எதிரான சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பான நிபந்தனைகள் ஏதுவுமின்றி, சர்வதேசநாணய நிதியம், இலங்கை அரசுக்கு 3 பில்லியன் டொலரை கடனாக வழங்கியுள்ளது.

இது நெறிமுறையற்ற மற்றும் நியாயமற்ற ஏற்பாடு என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி விஷ்வநாதன் ருத்திரகுமாரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த ஏற்பாடு, நேரடியாக ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்கான தண்டனையிலிருந்து இலங்கை அரசாங்கம் விடுபடுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவி தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் கைகள் இரத்தத்தில் நனைந்திருக்கும் நேரத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு உயிர்நாடியை வழங்குவது நெறிமுறையற்றது மற்றும் அநீதியானது மட்டுமல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கையுமாகும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காகக் கடன் வழங்கப்பட்டபோது இலங்கை அரசாங்கங்ளின் இராணுவமயமாக்கல் பிரச்சினையை உரியமுறையில் கையாளவில்லை. தமிழர் தாயகத்தை இராணுவ மயமாக்குவதற்காகக் கொடுக்கப்பட்ட விலை அதிகம்.

அதேநேரம் வீண் செலவுகள், ஊழல் மற்றும் நாட்டின் சர்வதேச கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலாமைக்கு இராணுவ கட்டமைப்பும் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி விஷ்வநாதன் ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...