தலைமன்னார் கடற்பரப்பில் 67.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தலைமன்னாரை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 04 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மிதந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கைகளின் காரணமாக கடத்தல்காரர்கள் இந்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு செல்ல முடியாமல் கடலில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை இந்த ஐஸ் போதைப்பொருள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.