காட்டு விலங்குகலின் பெருக்கத்தால் பயிர் சேதம் அதிகரிப்பு

0
244

வன அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வெளிவந்துள்ளதாகவும் விவசாய அமைச்சு கூறியுள்ளது.

வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தின் அளவும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது.

பயிர்களை சேதப்படுத்தும் ஐந்து விலங்குகளை ஆய்வறிக்கை அறிக்கை அடையாளம் காட்டுகிறது. குரங்குகள், மயில்கள், ராட்சத அணில்கள், மந்திகள் மற்றும் காட்டுப்பன்றிகளே பயிர்களை சேதப்படுத்துவதில் முதன்மையானவை.

2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், குரங்குகள், மந்திகள் மற்றும் ராட்சத அணில்களால் அழிக்கப்பட்ட தேங்காய்களின் பெறுமதி 92 மில்லியன் ஆகும். ஆண்டின் இறுதியில், அந்தத் தொகை 200 மில்லியனைத் தாண்டியதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

இதன் காரணமாக பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து அந்த விலங்குகளை நீக்க அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here