அரை சொகுசு பஸ் சேவைகள் எதிர்வரும் மே 31ம் திகதிக்குள் ரத்து செய்யப்படாது. அரை சொகுசு பஸ் சேவையை சூப்பர் சொகுசு அல்லது சாதாரண சேவையாக மாற்றுவது குறித்து முடிவெடுப்பதற்கான அமைச்சரவை உத்தரவுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து அரை சொகுசு பேருந்து உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இயக்குநர் ஜெனரல் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமார் 430 அரை சொகுசு பேருந்துகள் இயக்கத்தில் உள்ளன. இந்த பேருந்து சேவையை சூப்பர் சொகுசு அல்லது வழக்கமான சேவையாக மாற்ற விரும்புகிறீர்களா என்று உரிமையாளர்களிடம் விசாரித்துள்ளோம். இதுவரை 10 பேருந்துகளின் சேவைகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மாற்றியமைத்துள்ளது. ஆகவே இதுகுறித்து உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.
நிர்வாகக் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படாமல் சேவைத் திருத்தம் செய்யப்படும். இதனால், அரை சொகுசு பஸ் சேவை உரிமையாளர்கள் தங்கள் சேவையை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், குறிப்பிட்ட சில அரை சொகுசு பேருந்துகள் மே 31ஆம் திகதிவரை அப்படியே இயங்கும். பின்னர் சேவையில் திருத்தம் செய்வது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
அரை சொகுசுப் பேருந்து அதி சொகுசுப் பேருந்தாக மாறினால் அது குளிரூட்டப்பட்டதாகவும், அது பிற வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
N.S