ஹம்பாந்தோட்டை கடற்பகுதியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் இலங்கையில் அண்மைக்காலத்தில் பதிவான பாரிய நிலநடுக்கமாக காணப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட புவியியலாளரும் புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளருமான கலாநிதி ஸ்டெர்லிங் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கமே நாட்டில் அண்மைக்காலத்தில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
N.S