இலங்கையின் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டுமென வெளிநாட்டு கடனாளிகள் முன்மொழிந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வெளிநாட்டு கடனாளிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் போது, இலங்கை தனது உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பது குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.
உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதால் சிலர் கூறுவது போல் உள்ளூர் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகளில் எந்த நெருக்கடியும் ஏற்படாது. EPF பெறுபவர்களுக்கு எந்த அநீதியும் ஏற்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்.
இலங்கை வெளிநாட்டு கடனாளிகளுடன் தனித்தனியாக கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும். பாரிஸ் கிளப் மற்றும் இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் ஒரே மேடையில் நடைபெறும். சீனாவுடன் தனியான கலந்துரையாடல் நடைபெறும் எனவும் ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
N.S