இலங்கையின் உருளைக்கிழங்கு சிப்ஸ் பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யும் முதல் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளது.
பண்டாரவளை கஹட்டேவெல பிரதேசத்தில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை கஹட்டேவெலயில் உள்ள நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது.
மாலைத்தீவுகள், கனடா, ஐக்கிய இராச்சியம், லக்சம்பேர்க் மற்றும் தென் கொரியாவுக்கு இலங்கையில் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
வெலிமடை, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய இடங்களில் உருளைக்கிழங்கு செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ள இலகுவாக உள்ளதால் உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையை பண்டாரவளை கஹட்டேவெல பிரதேசத்தில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உருளைக்கிழங்கு பயிரிடும் 180 விவசாய குடும்பங்கள் தமது அறுவடைகளை இத்தொழிற்சாலையில் விற்பனை செய்ய முடியும் என இத்தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
N.S